போதைக்கு அடிமையாகி மரணம் எனும் பொறியில் அகப்படாதே! ஏதும் தனிப்பொருளில் மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களின் ஊர்வலம்

போதைக்கு அடிமையாகி மரணம் எனும் பொறியில் அகப்படாதே! ஏதும் தனிப்பொருளில் மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களின் ஊர்வலம்
  • :

மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் வித்தியாலய மாணவர்களின் போதைக்கு அடிமையாகி மரணம் எனும் பொறியில் அகப்படாதே! எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் பாவனையில் இருந்து தூரமாகி இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான விழிப்புணர்வு வீதி ஊர்வலம் நேற்று (26) மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி துஷ்யந்தி ஜயவதனன் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்பணர்வு ஊர்வலம் புனித திரேசா மகளிர் வித்தியாலயத்தில் இருந்து ஆரம்பித்து, கல்லடிப் பாலம் வரை பாடசாலை மாணவர்களின் நடை பவணியாக இடம்பெற்றது.

இதன்போது, போதையை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் பாடல் பாடி, கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பாடசாலை மாணவிகள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர் See

Related Articles