டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு
  • :

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

 

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு 30 பயனாளிகளுக்கான சுமார் 95 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளைப் பயனாளிகளிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜீ.ஜீ.குணசேன, இலங்கை தேசிய நீர்வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அதிகார சபை மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) எந்திரி என். சிவலிங்கம், கரையோர நீர் வாழ் உயிரினங்கள் வளர்ப்பு அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் எஸ். ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் .

Related Articles