கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக படகு மற்றும் வலைகளை இழந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நன்னீர் மீனவர்களுக்கான இழப்பீட்டு காசோலை வழங்கும் நிகழ்வு தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர். பி.நிருபராஜ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் ஆகியோர்
கலந்து கொண்டு காசோலைகளை வழங்கி வைத்தனர்.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், மீனவ சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் படகுகளை இழந்த 63 மீனவர்களுக்கு 6300000 ரூபா பெறுமதியான காசோலைகளும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் படகுகளை இழந்த 40 மீனவர்களுக்கு 4000000 ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.
இதேவேளை வலைகளை இழந்த முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த 237 மீனவர்களுக்கு 16560000 ரூபா பெறுமதியான காசோலைகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் வலைகளை இழந்த 214 மீனவர்களுக்கு 12855000 ரூபா பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.


