யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று(09.04.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளை சிறப்பாகவும் ஒழுங்காகவும் முன்னெடுக்கும் நோக்கில் குறித்த முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 2.30 மணியளவில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அரச அதிபர் வெற்றிக் கிண்ண போட்டித் தொடர் வெற்றி பெறுவது என்பதுக்கு அப்பால் உத்தியோகத்தர்களின் உடல் ஆரோக்கியம், அவர்களுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளை வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் இதன் ஊடாக உத்தியோகத்தர்களின விளையாட்டு திறன்களை மேம்படுத்தி, ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்ப்பதும் இப் போட்டியின் நோக்கமாகும். எனவே அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முறையில் செயற்பட்டு, அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளை குறிப்பிட்ட காலத்தினுள் சிறப்பாகவும் வெற்றிகரமாக நடாத்த அணைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அணிகள் கலந்துகொள்கின்றன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட புள்ளிவிபரவியலாளரும் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்க தலைவர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அரச அதிபர் வெற்றிக் கிண்ணப் போட்டிகளின் திட்டமிடல் மற்றும் நடைமுறை அம்சங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து முடிவுகள் எட்டப்பட்டன.
குறிப்பாக போட்டிகள் நடைபெறும் இடங்கள், நடைபெறும் போட்டிகளும் அதற்கான பொறுப்பு உத்தியோகத்தர்கள், கால அட்டவணை, பங்கேற்பு அணிகளின் பதிவுகள், நடுவர் குழு நியமனம், மற்றும் பார்வையாளர்களுக்கான வசதிகள் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன. மேலும், போட்டிகள் சீரான முறையில் நடைபெற தேவையான வளங்கள் மற்றும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.


