பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாரம் இது!
இந்தத் திட்டம் குறுகிய காலத்தில் சரிந்துவிடும், மேலும் பெரும்பாலான பங்கேற்பாளர்களுக்கு, பெரும்பாலும் புதிய உறுப்பினர்களுக்கு, அவர்கள் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. உண்மையான மதிப்பை விட அதிகமாக செலுத்தி பெற்ற பொருட்கள் மாத்திரமே அவர்களுக்கு எஞ்சியிருக்கும்.
இந்தத் திட்டங்களின் தோல்வி காரணமாக, வாக்குறுதியளிக்கப்பட்ட வருமானம் கிடைப்பதில்லை, இது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே கூட ஏராளமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கடன்களை எடுத்து இந்தத் திட்டங்களில் சேரும் சில பங்கேற்பாளர்கள் திட்டம் சரிந்த பிறகு கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இலங்கையில் பிரமிட் திட்டங்கள் 1988 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 83C இன் கீழ் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அத்தகைய திட்டங்களில் பணம் செலுத்தும் முறைகள் மற்றும் பரிவர்த்தனைகள் என்பன தடைசெய்யப்பட்டுள்ளன.


