எல்பிடிய பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிகளுக்கான தெளிவுபடுத்தல் பயிற்சி நிகழ்வொன்று காலி வக்வெல்ல தென்மாகாண சபை முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேற்று (10) தென்மாகாண ஆளுநர் எம். கே. பந்துல ஹரிஷ் சந்திர தலைமையில் இடம்பெற்றது.
தற்போது இலங்கையின் மக்கள் பிரதிநிதிளுடன் செயற்படுத்தப்படும் ஒரே பிரதேச சபையாக எல்பிடிய பிரதேச சபை காணப்படுகிறது.
இதன் போது பிரதேச சபை சட்டம், அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்டங்கள் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன், பிரதேச சபையின் தவிசாளர் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கடமைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.