2025 செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 செப்டம்பர் மாதம் 05 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களிலும் சிறிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும். பி.ப.2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
நாட்டின் சில பகுதிகளில் பிரதானமாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவிலும் வடமத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கிலோமீட்டர் வேகத்தில் கடும் காற்று வீச கூடும்.
தொடர்ச்சியான சூரியனின் தெற்கு நோக்கி பயணத்தின் போது
ஆகஸ்ட் மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை இலங்கை அண்மித்த அகலங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கும். அதன்படி இன்று நண்பகல் 12:09 மணிக்கு நல்லூர், பலாங்கடை, ரத்மலவின்ன, புதுருவல மற்றும் பாணம போன்ற பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும்.


