ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு
  • :

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
அதன்படி இந்நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றத்திற்காக திட்டமிட்டிருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் தெளிவுபடுத்தினார்.

புதிய சுற்றுலா வலயங்களை நிறுவுதல் மற்றும் சுற்றுலாத்துறையின் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிறுவனங்களின் பங்களிப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தினால் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து திருப்தியடைவதாகவும் தெரிவித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் SLRM இலங்கைக்கான செயல் தலைவர் ஷொல்போன் மெம்பெடோவா (Cholpon Mambetova), நீர் மற்றும் நகர அபிவிருத்தி பணிப்பாளர் (SG-WUD) ஸ்ரீனிவாஸ் சம்பத், சிரேஷ்ட நகர அபிவிருத்தி நிபுணர்/செயல் தலைவர் எல்மா மோர்ஷெடா (Elma Morsheda) சிரேஷ்ட திட்ட அதிகாரி (SG-WUD) ) பாஞ்சாலி எல்லேபொல, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]