பஸ்களை செலுத்தும் போது ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று [01] முதல் பஸ் சாரதிகள் முன்னிருக்கை பாதுகாப்புப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
ஆணைக்குழுவின் தலைவர் பொறியாளர் பி. ஏ. சந்திரபால இது தொடர்பாகக் குறிப்பிட்டார்.
இந்தத் தீர்மானம் தண்டனை வழங்கும் நோக்கமன்றி மக்களின் பாதுகாப்பிற்கே என விசேட கவனம் செலுத்தி செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.


