தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற மெதகெகில பிறிமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக முஹம்மட் அஜ்மிர் தலைமையிலான வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவானது. முஹம்மட் ஸனீர் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணியினை வெற்றிக் கொண்டே இவ்வாறு வெஸ்டர்ன் வொரியஸ் அணி வெற்றி வாகை சூடியது.
கடந்த ஏப்ரல் மாதம் 02, 03ம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரில் மொத்தம் 08 அணிகள் மோதின. லீக் முறையில் இடம்பெற்ற இந்த தொடரில் தமது முதல் 03 போட்டிகளிலும் தோல்வியினை தழுவி தொடரிலிருந்து வெளியேறும் நிலையிலிருந்த பெரோனி தலைமையிலான சுபர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டது அனைவராலும் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது.
இந்த தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களை பிரபல சமூக சேவையாளர் கலாநிதி முனீர் ஸாதிக் (காஸிபி) அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.