கலாச்சாரத் திணைக்களத்தால் செயல்படுத்தப்படும் பண்டைய கிராமிய விளையாட்டுகளை மீண்டும் மக்கள் மயப்படுத்தும் திட்டங்களின் கீழ், கிராமிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று அண்மையில் புருன்னாவ கிராமத்தில் நடைபெற்றது.
இங்கு தற்காலத்தில் காண முடியாத பல கிராமிய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. இந்த விளையாட்டுகளில் மீன் பிடிப்பது, சேற்றை எறிவது, வில்வித்தை மற்றும் மரக் கட்டைகளின் மீது குதிப்பது ஆகியவை அடங்கும்.