மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பொருட்டு உலக உணவுத் திட்டத்தின் கீழ் ஆழுP உரம் 365 தொன் தற்போது கிடைத்துள்ளதாக மாவட்ட விவசாய சேவை ஆணையாளர் பி.என்.சி.எச். குமாரிஹாமி தெரிவித்துள்ளார் என மாத்தளை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
தற்போது 150 தொன் உரம் 5 விவசாய சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மையங்களுக்கு உரம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
2024ஃ25 காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் நெல் சாகுபடி இலக்கு ஏறக்குறைய 21.935 ஹெக்டெயர் ஆகும் எனவும் மாவட்டத்திற்கு சுமார் 642 தொன் ஆழுP உரம் தேவைப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உரத் தொகுதி கிடைத்தவுடன் மாவட்ட விவசாயிகளிடையே உடனடியாக பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக விவசாய சேவை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.