வானிலை முன்னறிவிப்பு

  • :

2025 ஜூலை மாதம் 12ஆம் திகதி வானிலை முன்னறிவிப்பு 

2025 ஜூலை மாதம் 12ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது 
 
 
சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது. 
 
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சிறிய மழை பெய்யக்கூடும்.
 
 
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
 
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில்  அவ்வப்போது பயணிக்கும் காற்று மணிக்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் வீசலாம். 
 
 
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

Related Articles