Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடைபெறவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சில நிறுவனங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் அதன் முக்கிய நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் முன்னெடுக்கப்படுவதாகவும், அது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அசித்த நிரோஷன கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர், மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த கருத்தை செயல்படுத்துவதில் சில குறைபாடுகள் ஏற்படலாம்;. இது கட்டாயப்படுத்தி செயற்படுத்தக்கூடிய திட்டம் அல்ல. இது ஒரு புதிய வேலைத்திட்டம். சட்டம் கொண்டு வந்து இதைச் செய்யுங்கள் என்று சொல்லும் வேலைத்திட்டம் அல்ல. எமக்கும் இது ஒரு புதிய விடயம். நாம் இதையும் சரி செய்து வருகிறோம். இது தொடர்பாக ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய இரு நாட்கள் பாராளுமன்ற விவாதத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகள் மற்றும்; அரசியல் கட்சிகள் இந்த விடயத்தை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.