கல்விச் சீர்திருத்தங்கள் சாதகமான மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு, 2026ஆம் ஆண்டு முதல் கல்வி முறையில் உரிய சீர்திருத்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 13 வருட கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறினார்.
கல்வி நிறுவனங்களை முறையாக வகைப்படுத்தி, நிறுவன அமைப்பில் செய்யப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களின் மூலம், 2025 ஆம் ஆண்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும், 2025 ஆம் ஆண்டு தொடர்பாக பாடத்திட்ட சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.