தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள்
  • :

2024ஆம் ஆண்டு பாராhளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டடுள்ள காலப்பகுதியில் இன்று (13ஆம் திகதி) சில அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் விதத்தில் ஊடகங்கள் முன் கருத்துக்களை வெளியிட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையின் பிரகாரம் இவ்வாறான கருத்துக்களுக்கு எவ்வித விளம்பரமும் வழங்க வேண்டாம் என்பதுடன், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினரும் கடைபிடிக்குமாறும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles