2024/2025 ஸ்ரீபாத யாத்திரை காலத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், நினைவுச்சின்ன கலசம் மற்றும் சமன் கடவுளின் சிலை நேற்று (14) பெல்மடுல்ல, கல்பொத்தவெல, ஸ்ரீபாத ரஜமஹ விஹாரையில் வைக்கப்பட்டன.
ஸ்ரீபாதஸ்தானத்தின் அதிபதி, இரத்தினபுரி மாவட்டத்தின் பிரதான சங்கநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அறிவுறுத்தலின் பேரில், நேற்று முன்தினம் (13) ஸ்ரீபாத ஸ்தானத்திலிருந்து கொண்டு வரப்பட்டு பெல்மடுள்ள ரஜமக விஹாரையில் வைக்கப்பட்டிருந்த சமன் கடவுளின் சிலை மற்றும் நினைவுச்சின்ன கலசம் என்பன நேற்று (14) பெல்மடுள்ள கல்பொத்தவெல ஸ்ரீபாத ரஜமகா விஹாரைக்கு கொண்டு வரப்பட்டதாக இரத்தினபுரி மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.