சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க விபத்துக் காப்பீட்டு திட்டம் ஒன்றை செயல்படுத்தவுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
ஏனைய காப்பீட்டு நிறுவனங்கள் அறவிடும் காப்பீட்டுத் தொகையை விட சலுகை அடிப்படையிலான காப்பீட்டுத் தொகை ஒன்றை அறவிட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
.
சுரங்கத் தொழில் மிகவும் ஆபத்தான தொழிலாகவும், பாதுகாப்பற்றதாகவும் காணப்படுவதால், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவடைவதை அவதானிக்க முடிகிறது. இதற்கு தீர்வு காணும் பொருட்டு கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை குறித்த காப்பீட்டு திட்டத்தை சுரங்க தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.