2025 ஆம் ஆண்டில் கடந்த ஐந்து மாதத்திற்கு மாதத்திற்குள் தென் கொரியாவில் தொழில் வாய்ப்பிற்காக இலங்கையின் 1,619 இளைஞர் யுவதிகள் சென்றுள்ளனர்.
தென்கொரியாவில் உற்பத்தி துறையில் தொழில் வாய்ப்புகளுக்காக தகுதி பெற்ற இளைஞர் யுவதிகள் 96 பேர் நேற்று முன்தினம் (2025.05.20) இலங்கை விமான சேவைக்கு சொந்தமான UL 470 இலக்க விமானத்தில் புறப்பட்டுச் சென்றதுடன், இந்தக் குழுவில் ஏழு யுவதிகளும் உள்ளடங்குவர்.
இந்தக் குழு தென்கொரியாவில் தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற 910 வது குழுவாகும்.
அண்மைக்காலமாக யுவதிகளும் தென்கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக அனுப்புவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், அதன்படி 2025 ஆம் இந்த வருடத்தில் இதுவரை 56 பேர் சென்றுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் தென்கொரிய மனித வள அபிவிருத்தி நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இணங்க E-9 விசா குழுவின் கீழ் இந்த தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதுடன், தென்கொரியாவில் உற்பத்தி, நிருமாணம், மீன்பிடி மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் இவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கவுள்ளது.
4 வருடங்கள் 10 மாத காலத்தினுள் தென்கொரியாவில் தங்கி இருப்பதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் தென்கொரியாவில் குறித்த காலப்பகுதி நிறைவுற்றதும் நாட்டிற்கு மீளத் திரும்பும் தொழிலாளர்களுக்கு மீண்டும் தென்கொரியாவிற்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைக்கும். அதன்படி இளைஞர்கள் 450 பேர் இரண்டாவது தடவையாக (Re-entry) தென்கொரியாவில் தொழில் வாய்ப்பிற்காக சென்றுள்ளனர்.
2024 ஆண்டில் இலங்கையின் 7,122 தென்கொரியாவில் தொழில் வாய்ப்பிற்காக சென்றமை குறிப்பிடத்தக்கது.