நாடு முழுவதும் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் "யூத் கிளப் " இளைஞர் கழகங்களை ஆரம்பித்து, நாளை (23) தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் இதனை குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமாக யூத் கிளப்பை நிறுவுவதை ஒரு வருடத்துக்குள் நடைமுறைப்படுத்தும் பாரிய திட்டம் என சுட்டிக்காட்டினார். 1983 மே 23 ஆம் திகதி அன்று இலங்கையின் முதலாவது தேசிய இளைஞர் மாநாடு ஆரம்பிக்கப்பட்டதுடன், அதனை நினைவு கூறும் விதமாக மே மாதம் 23 ஆம் திகதி தேசிய இளைஞர் தினமாக பெயரிடப்பட்டதாகவும் விபரித்தார்.
நாடு முழுவதும் உள்ள 15 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு "யூத் கிளப்"புடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்த இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர், அதற்காக கிராமசபகர் மட்டத்தில் 14,033 இளைஞர் கழகங்களை அமைப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் மே 30 இலிருந்து ஜூலை 15 ஆம் திகதி வரை பிரதேச செயலகங்களில் யூத் கிளப் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஜூன் 01 ஆம் திகதியில் இருந்து ஜூலை 31 ஆம் திகதி வரை மாவட்ட மட்டத்தில் அமைப்பதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவு படுத்தினார்.
ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினத்தில் சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கிற்கு நாட்டின் இளைஞர் யுவதிகளை ஒன்று சேர்த்து தேசிய இளைஞர் சம்மேளனத்தை உருவாக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர் தினத்தில் இருந்து சர்வதேச இளைஞர் தினம் வரையான காலப்பகுதியில் இலங்கையின் பாரிய இளைஞர் தொண்டு அமைப்பை நிறுவுவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இச்சந்தர்ப்பத்தில் செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்