2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித் துறையை வலுவானதாகவும், குறித்த வளர்ச்சியை தொடர்ந்தும் பேணுவதுடன் இக்காலப் பகுதியில் 5.8 வீத வருடாந்த அதிகரிப்பை பதிவிட்டுள்ளதுடன் இலங்கை சுங்கத்தின் தற்காலிகத் தரவுகளுக்கு இணங்க மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் மதிப்பிடப்பட்ட இரத்தினக்கல் மற்றும் தங்காபரணங்கள் மற்றும் மசகு எண்ணெய் உற்பத்திக்கா ஏற்றுமதி வருமானம் 15776.36 டொலர் மில்லியன் என ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி மங்கள விஜேசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற விசேட ஊடகக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதான சந்தைகளை வழமைக்குக் கொண்டு வருதல், நிலைபேறாண உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி தந்திரோபாய வழிகளை வினைத்திறனாக செயற்படுத்துவதனால் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பலம் மற்றும் போட்டித் தன்மைகளை வலியுறுத்துவதாக அதன் போது அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் 2025 நவம்பர் மாதத்தில் சந்தைப் பொருட்கள் மற்றும் சேவை ஆகிய துறைகளில் மொத்த ஏற்றுமதி 1364.52 மீ,அமெரிக்க டாலர்கள் என்றும் அது 2024 நவம்பருடன் ஒப்பிடும் போது 5.56 வருடாந்த அதிகரிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறே 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சந்தையில் பொருட்களின் ஏற்றுமதி 124 17.98 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதுடன் அது 2024 அக்காலப் பகுதியுடன் ஒப்பிடும் போது 6.41% அதிகரிப்பாகும்.
2025 நவம்பர் மாதத்தில் சேவை ஏற்றுமதி 4.27% ஆல் அதிகரித்து 311.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் காணப்பட்டதாக மிதிப்பிடப்பட்டுள்ள தாகவும் 2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் சேவை ஏற்றுமதி 3.63% ஆல் அதிகரித்திருந்ததாக மதிப்பிடப்பட்டதாகவும் அது 3, 358.38 , என்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


