2025 உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் விசேட நிகழ்ச்சிகள்

2025 உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் விசேட நிகழ்ச்சிகள்
  • :

2025 உலக இளைஞர் திறன் தினத்தைக் கொண்டாடும் வகையில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தொழிற்கல்விப் பிரிவு நேற்று (15) முழுவதும் நாட்டின் 04 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் பல விசேட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

2014 ஆம் ஆண்டு உலக இளைஞர் திறன் தினத்திற்கான முன்மொழிவை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்த நாடும் இலங்கையாகும். இதன் விளைவாக, 2015 ஆம் ஆண்டு முதல் 'உலக இளைஞர் திறன் தினம்' என்ற பெயரில் உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. இது இந்நாட்டின் கல்வித் துறைக்கு ஒரு பெரிய சாதனையாகும்.

அதன்படி, இந்த ஆண்டு, "செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இளைஞர்களை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாத்தறை, குருநாகல் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, அதன் பிரதான நிகழ்வு ஒருகொடவத்தையில் உள்ள கொரிய தேசிய தொழிற்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

 

Related Articles