தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இன்றிலிருந்து ஆரம்பம்

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் இன்றிலிருந்து ஆரம்பம்
  • :

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் வைத்திய கலாநிதி சுனிமல் ஜெயக்கொடி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (14.07.2025) காலை 09.00 மணிக்கு கொடிகாமம் கச்சாய் கிராம த்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நேற்று சாவகச்சேரி கச்சாய் கிராமத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 150 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தம் திட்டமானது ஆரம்பித்து வைக்கப்பட்டது. தென்பகுதியிலிருந்து 150 பணியாளர்கள் இச் செயற்றிட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுடன், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியின் ஏனைய கிராமங்களிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும் தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னைப் பயிர்ச் செய்கையின் தலைவரினால் வெள்ள ஈ தாக்கத்தினை கட்டுப்படுத்த மாகாண மட்டத்தில் கெளரவ ஆளுநர் தலைமையிலும் மாவட்ட மட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையிலும் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles