இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 பெப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 279,328 ஆகும்.
இது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது அதிக எண்ணிக்கையாகும்.
தொடர்புடைய அறிக்கையின்படி, பெப்ரவரி மாதத்தில் இந்தியாவில் இருந்தே அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அடுத்தபடியாக, ஐக்கிய இராச்சியம், ரஷ்யா, ஜெர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டின் முதல் 02 மாதங்களில் 556,655 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


