2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை விநியோகம் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை விநியோகம் நிறைவு
  • :

2026 ஆம் ஆண்டிற்காக சீன மக்கள் குடியரசின் நன்கொடையாகக் கிடைத்த பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் நிறைவடைந்துள்ளது.

அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவ மாணவிகளுக்கும், அரச அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களின் மாணவ பிக்குகள், பிக்குணிகள் மற்றும் பொது மாணவர்களுக்கும் 2026 ஆம் ஆண்டிற்குத் தேவையான 11.484 மில்லியன் மீற்றர் துணிகள் சீன மக்கள் குடியரசினால் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இதற்கமைய, 4,418,404 மாணவர்களுக்கான சீருடைத் துணிகள் அனைத்தும் விநியோகிக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

 

Related Articles