2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர்கள் கவுன்சில் (NCE) ஏற்பாடு செய்த 33வது "NCE ஏற்றுமதி விருது விழா - 2025" இல் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
2025 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17.2 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.
"கடன் இல்லாத, வெளிநாட்டு நோக்கற்ற, சுதந்திரத்தையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வலுவான உள்நாட்டு பொருளாதாரத்தை" உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.


