பதவிய பிரதேச செயலகப் பிரிவின் போகஹவெவ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள கொலொங்கொல்ல குளக்கட்டின் பகுதியளவு சேதமடைந்த பகுதியை 9 வது கஜபா படையணி படையினர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி வெற்றிகரமாக சீரமைத்தனர்.
இந்த சேதம் சுற்றியுள்ள சமூகத்தின் நெல் உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தியது. உள்ளூர் சமூகத்தின் ஆதரவுடன் ஆபத்தை உணர்ந்து, 12 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மணல் மூட்டைகளைப் பயன்படுத்தி குளக்கட்டை பலப்படுத்தி, நீர் கசிவை தடுத்தனர்.
இதேபோல், இலங்கை பீரங்கிப் படையணியின் 14 ராக்கெட் வது படையணி மற்றும் 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி படையினர் 2025 ஏப்ரல் 04 ஆம் திகதி கல்னேவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஹெம்பிட்டியாகம குளக்கட்டின் சேதமடைந்த பகுதியை வெற்றிகரமாக சீரமைத்தனர்.
வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் மேற்பார்வையுடன் இந்த திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன.