இலங்கை சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாட்டுக் கடவுச்சீட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கட்டண அறவீடின்றி 06 மாதங்களுக்கு இலவச சுற்றுலா வீசா வழங்கும் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான உரிய அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலவச சுற்றுலா வீசா வழங்குவதற்காக குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.


