சம்பா மற்றும் கீரிசம்பா அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக மாற்று அரிசி வகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி

சம்பா மற்றும் கீரிசம்பா அரிசித் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக மாற்று அரிசி வகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி
  • :

நிரந்தர விலையுடன் கூடிய சம்பா மற்றும் கீரி சம்பா போன்றவற்றுக்கு சந்தையில் காணப்படும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்கு குறித்த அரிசி வகைகளுக்கு சமமான அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையை உள்ளதாக உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, HS Code 1006.30.29 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பொன்னி சம்பா மற்றும் கீரி/பால் பொன்னி சம்பா உள்ளிட்ட GR 11 என அழைக்கப்படும் அரிசி வகையில் 1,040 மெற்றிக்தொன் உயர்ந்பட்ச அளவை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2025/26 போகத்தில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி மொத்த உற்பத்தியானது எமது நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இல்லை என்று தெரரியவந்துள்ளது.

விவசாயத் திணைக்களம், ஹெக்ரர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவ நிறுவனம் போன்றவற்றால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாவனையாளர் விவகாரங்கள் தொடர்பான அதிகாரசபை இதனை சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவொரு இறக்குமதியாளரும் 2026.04.01 முதல் 2026.04.30 வரை அரிசியை இறக்குமதி செய்து, 2026.05.31அன்றோ அல்லது அதற்கு முன்னரோ இலங்கைச் சுங்கத்திலிருந்து அரிசி இருப்புகளை விடுவித்துக் கொள்ளலாம்.

மேலும், இவ் அரிசி வகையை இறக்குமதி செய்கின்ற இறக்குமதியாளர்களுக்கு இறக்குமதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் ஒருங்கிணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனூடாக, சந்தை விலைகளை நிலைப்படுத்தி, நுகர்வோருக்கு அரிசி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.

,

Related Articles