அடுக்குமாடிக் குடியிருப்புகளை நவீனமயமாக்குவதற்கான Metro Uplift தேசியத் திட்டம் ஆரம்பம்

அடுக்குமாடிக் குடியிருப்புகளை நவீனமயமாக்குவதற்கான Metro Uplift தேசியத் திட்டம் ஆரம்பம்
  • :

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நலத்திட்டத்தின் மற்றொரு நிலையான முன்னேற்ற நடவடிக்கையாக, Metro Uplift தேசியத் திட்டம் நேற்று (31) கொலன்னாவ, சாலமுல்லவில் உள்ள ‘லக்சந்த ச​ெவன’ அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவின் தலைமையில் உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த Metro Uplift சமூக நல தேசியத் திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டில் பல மறுசீரமைப்புகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கொலன்னாவ லக்சந்த ச​ெவனவை நவீனமயமாக்குவதற்காக ரூ. 1,288.7 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நவீனமயமாக்கலின் கீழ், சேதமடைந்த மின்தூக்கிகளை (Elevators/Lifts) சரிசெய்தல், புதிய மின்தூக்கிகளை (Elevators/Lifts) நிறுவுதல், சேதமடைந்த இரண்டு குடியிருப்பு அலகுகள் புதுப்பிக்கப்படும், சிறுவர் பூங்கா அபிவிருத்தி செய்யப்படும், கழிவு முகாமைத்துவம் சீரமைக்கப்படும், கட்டிடங்கள் B மற்றும் C-இல் உள்ள பொது ஜன்னல்கள் சரிசெய்யப்படும், பாதுகாப்பு வேலிகள் சரிசெய்யப்பட்டு வாயில்கள் நிறுவப்படும், கட்டிடம் A-இன் நடைபாதைகளுக்கு ஒரு புதிய வடிகால் அமைப்பு நிறுவப்பட்டு வெளிப்புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசப்படும், மேலும் சமூக மேம்பாட்டிற்காக சமூக வலுவூட்டல் திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் பகுதி நகர்ப்புற (Semi-urban) அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களின் வாழ்க்கையை உயிர்ப்பிப்பதையும், அவர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் பல சமூக நலத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையால் செயற்படுத்தப்படும் 24 அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களின் நவீனமயமாக்கல் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பௌதீக நவீனமயமாக்கலுக்கு இணையாக, பல்வேறு பிரச்சனைகளுடன் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியான வசதியை உருவாக்கும் நோக்கில் ஒரு சமூக வலுவூட்டல் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

Related Articles