70 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை வழங்குதல் - மார்ச் 2026
அஸ்வசும உதவித் திட்டத்தின் முதல் கட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு 2026 மார்ச் மாத முதியோர் உதவித்தொகையாக ரூ. 3,112,310,000.00 யும், மற்றும் இரண்டாம் கட்டத்தில், 70 வயதுக்கு மேற்பட்ட 71,339 முதியோர்களுக்கு 2026 மார்ச் மாதத்துக்கான முதியோர் உதவித்தொகையாக ரூ. 356,695,000.00 யும் உரிய பயனாளிகளின் அஸ்வசும வங்கிக் கணக்குகளில் 2026 மார்ச் 26 ஆம் திகதி வைப்பிலிடப்படும். அவர்கள் தங்களது அஸ்வசும உதவித்தொகைக் கணக்கு மூலம் 2026 மார்ச் 26 முதல் தங்களது உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.
- நலன்புரி நன்மைகள் சபை


