மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
  • :

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

2026 மார்ச் மாதம் தொடர்பான மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம், அக்குழுவின் இணைத் தலைவர்களான கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் சுசிரிபால மணவாடு ஆகியோரின் தலைமையில், நேற்று (24) மாத்தறை மாவட்ட செயலகத்தின் காமினி ஜயசேகர அரங்கில் நடைபெற்றது.

நாட்டில் மின்சார நுகர்வோராகிய நாம், மின்சார நுகர்வு நேரங்களில், குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, தேவையற்ற விளக்குகளை அணைப்பதன் மூலம், மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு ஒரு பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும் என்று அக்குழுவின் தலைவர் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், ஆற்றல், சுற்றுச்சூழல் விவகாரங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு

Related Articles