ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் DITWAH பிந்தைய மீள்குடியேற்றத் திட்டம் தொடர்பான கூட்டம் இன்று (06 ஏப்ரல்) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
AIIB-ஐ பிரதிநிதி குழுவிற்கு Toshiyaki Kiecho தலைமை தாங்கினார். கூட்டத்தின் போது, இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், திட்டத்தின் வெளிப்படைத் தன்மை, பொறுப்புணர்வு மற்றும் பயனுள்ள அமுலாக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
திட்டத்தின் அமுலாக்கம் முழுவதும் வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் பேணப்பட வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நிலையான வீட்டு வசதிகளை வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமையும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டதுடன், தொடர்புடைய அனைத்து தரப்புகளுக்கிடையில் சரியான கண்காணிப்பும் ஒருங்கிணைப்பும் பேணப்பட்டு, திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


