2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஐந்து நாட்களில் 26,800 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5 வரை 767,434 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அதிகமானவர்கள் இந்தியா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, ரஷ்யா, சீனா, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர்.


