இலங்கையில் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அபிவிருத்திக் கருத்திட்டங்களை தேவையற்ற தாமதங்களின்றி அமுல்படுத்தல் அவசியமாகும்.
அத்துடன், குறித்த கருத்திட்டங்களின் பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படும் காலத்தில் அடைவதற்காக மனித வளங்கள் மற்றும் பௌதீக வளங்களை முறையாகக் குறித்த கருத்திட்டங்களுக்கு வழங்குவதுடன், வளங்களை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தல், அரசின் மூலதனச் செலவுகளுக்கு உயரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளல், அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அரச முதலீடுகள் மூலம் அமுல்படுத்தப்படும் கருத்திட்டங்களில் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை காலத்தோடு தழுவியதாக மக்களுக்குக் கிடைக்கின்றமையை உறுதிப்படுத்தல் போன்ற பிரதான நோக்கங்களை அடைவதற்காக தற்போது நடைமுறையிலுள்ள சுற்றறிக்கை ஏற்பாடுகளை இற்றைப்படுத்த வேண்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடையதாக வெளியிடப்பட்டுள்ள 2019.03.15 திகதிய 012019 ஆம் இலக்க முகாமைத்துவச் சேவைகள் சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கும். அதற்குப் பதிலாக இற்றைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் உள்ளடங்கிய புதிய முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது


