பல தசாப்தங்களாக இலங்கையுடன் பல்வேறு துறைகளுக்குரிய நீண்டகால மற்றும் நல்லுறவான இராஜதந்திர தொடர்புகளைப் பேணிச் செல்கின்ற றுமேனியா, குறிப்பாக கட்டுமானங்கள், உற்பத்திகள்,
உபசரிப்புச் சேவைகள் போன்ற துறைகளில் திறன் மற்றும் பகுதியளவிலான திறன்களுடன் கூடிய இலங்கைத் தொழிலாளர்கள் வகுதியகளில் பிரபலமான புலம்பெயர் தொழில் நாடாக மாறியுள்ளது. சமகாலத்தில் றுமேனியாவுக்கு இலங்கை தொழிலாளர்களை ஆட்சேர்ப்புச் செய்தல், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கண்காணிப்பின் கீழ் அனுமதிப்பத்திரதாரர்கள் தனியார் தொழில் முகவர் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆயினும், அதிகரித்து வருகின்ற தொழிலாளர் கேள்வி காரணமாக மிகவும் திட்டமிட்ட முறையிலும் நிலைபேறான ஆட்சேர்ப்பு முறையொன்றை உருவாக்குவது பொருத்தமானதென இருதரப்பினராலும் அடையாளங் காணப்பட்டுள்ளமையால், கீழ்க்காணும் நோக்கங்களுடன் கூடியதாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கும் றுமேனியா அரசுக்கும் இடையிலான தொழிலாளர் துறையில் ஒத்துழைப்புக்கள் பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
தொழிலாளர் ஆட்சேர்ப்பு மற்றும் முகாமைத்துவத்திற்கான முறையான பொறிமுறையை உருவாக்கல்
- விழுமிய ரீதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் ஊக்குவித்தல் கூடிய ஆட்சேர்ப்பு முறைகளை
- புலம்பெயர் தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலனோம்புகையைப் பாதுகாத்தல்
- இரு நாடுகளுக்கிடையில் தகுந்த அதிகாரிகளுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கான வசதிகளை வழங்கல்
- தொழிலாளர் துறையில் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள், திறன் அங்கீகாரம் மற்றும் இயலளவு விருத்தி போன்றவற்றை மேம்படுத்தல்


