பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நவீன விமான மையமாக மாற்றுவதற்கு இலங்கை அரசு பல திட்டங்களை ஆரம்பித்துள்ளது.
இதன் கீழ், விமான நிலையத்தின் எல்லை அமைப்பை வலுப்படுத்துதல், அதை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பயணிகள் வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகும்.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பாதுகாப்பான புலம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு (IOM) செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, ஜப்பான் தூதரகம் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்விற்கான சர்வதேச அமைப்பு (IOM) ஆகியவை இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முதல் தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு கட்டமைப்பு (E - Gate) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட து.
இந்தப் புதிய கட்டமைப்பின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், குடிவரவு மற்றும் குடியகல்வுக்கான பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பதிராஜா மின்-கேட் அமைப்பின் வழியாக நடந்து சென்றார்.


