நாடு பூராகவும் அமைந்துள்ள 130 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வைத்தியசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பிரதானமான தனியார் வைத்தியசாலைகளுக்கு அண்மையில் அரச மருந்தகங்களை (ஒசுசல) ஆரம்பித்து மக்களுக்கு உயர் தரம் மற்றும் உயர் பண்புத் தரத்துடன் கூடிய மருத்துகளை நியாயமான விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க மருந்தக கூட்டுத்தாபனத்தின் (SPC) 65 வது அரச ஒசுசலவின் நாராஹேன்பிட்ட கிளையை இலக்கம் 209,கிருல வீதி நாராஹேன்பிட்ட எனும் இடத்தில் திறந்து வைக்கும் சந்தர்ப்பத்தின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசாங்கம் ஆட்சியமைத்ததன் பின்னர் தாபிக்கப்பட்ட மூன்றாவது அரச ஒசுசல கிளை இது என்பதுடன், கல்கிஸ்சை மற்றும் கிரிபத்கொடை ஆகிய நகரங்களில் ஏனைய ஒசுசல கிளைகள் இதற்கு முன்னராக ஆரம்பிக்கப்பட்டன.
தற்போதைய சுகாதார அமைச்சரின் கருத்திட்டத்திற்கமைய மக்களின் தேவைகளுக்கு ஏற்ப நாடு பூராகவும் அரச ஒசுசல கிளைகளை தாபிக்கும் விசேட வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இந்த ஒசுசல ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


