கொழும்பு துறைமுக Maritime Facility கட்டடத்தின் நிருமாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஆலோசனை

கொழும்பு துறைமுக Maritime Facility கட்டடத்தின் நிருமாணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு ஆலோசனை
  • :

கொழும்பு துறைமுகத்தின் maritime facility கட்டத்தின் முன்னேற்றம் குறித்து கண்டறிவதற்காக விசேட கண்காணிப்பு விஜயத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு நேற்று (26) ஈடுபட்டார்.

இது வரை குறிப்பிட்ட காலத்தை விட இரண்டு வருடங்கள் அளவில் காலம் கடந்த இக்கட்டடத்தின் நிருமாணப் பணிகள் மந்த நிலையில் காணப்படுவதை கண்காணிப்பின் போது ஒப்பந்ததாரர் கம்பனிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பிரதி அமைச்சர், மந்த நிலையில் நடைபெறும் கட்டுமாணப் பணிகளை விரைவு படுத்தி திட்டத்தை விரைவில் முடிவுறுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

இதன்போது இலங்கை துறைமுக அதிகார சபை தலைவர், தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

Related Articles