அரச அச்சக திணைக்களத்தில் அரசாங்க அழுத்தகர் பதவிக்கு தற்போது தேசிய வரவு செலவுத் திட்ட திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அலுவலர் திரு. கே.ஜி.பி. புஸ்பகுமார அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (30.12.2024) நடைபெற்ற அமைச்சரவையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச அச்சக திணைக்களத்தில் அரசாங்க அழுத்தகர் பதவியில் சேவையாற்றும் திருமதி. ஜி. கே.டி.லியனஹே அவர்களது சேவைக்காலம் 2024.12.24 திகதி முடிவடைந்த பின்னர் குறித்த பதவி வெற்றிடமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.