நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் நேற்று (30) இடம்பெற்றது.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் நீதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.