அரசியல் தேவைகளுக்காக அல்லது நாட்டின் பொருளாதாரத்தை சீர்குழைக்கும் ஒப்பந்தங்களுக்கு புதிய அரசாங்கம் உடன்படப்போவதில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அத்துடன், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, மக்களின் அதிருப்திக்கு உள்ளான வங்குரோத்து அரசியல்வாதிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.