ஜனாதிபதியின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கையின் 1500 அரச ஊழியர்களுக்கு இந்தியாவில் இரண்டு வார பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து ஊடகங்களுக்கு அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்படி அடுத்த 05 வருடங்களில் அரச உத்தியோகத்தர் ஒருவர் 02 வாரங்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.