டிசம்பர் முதல் மே வரையிலான வருடாந்த புனித பயணத்தின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில், உடுவப் பெளர்ணமி தினத்தன்று சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பமானது. இரத்தினபுரி, கல்பொத்தவல சிவனொளிபாதமலை ரஜ மகா விஹாரையில் புனித தாது மற்றும் சுமன சமன் சிலை பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட சமய சடங்குகளுடன் இவ்வருட நிகழ்வு ஆரம்பமானது.
கெமுனு ஹேவா படையணி படையினரல் சம்பிரதாய அணிவகுப்பின் பின்னர் பலபத்தல புராண விகாரையிலிருந்து ராஜ மாவத்தை வழியாக சிவனொளிபாதமலை மலுவை வரை நினைவுச்சின்னம் மற்றும் சிலையை ஏந்தி சம்பிரதாய அணிவகுப்பு நடத்தினர். அத்விகந்த ஆராமயவில் இருந்து எரத்னா ஊடாக இணையான ஊர்வலம் நடத்தினர்.
கெமுனு ஹேவா படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எடி ரொட்ரிகோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ,சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் 220 படையினர், இந்த வருடாந்த சம்பிரதாய நிகழ்வில் பங்கேற்றனர். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று சிசிவனொளிபாதமலையில் இணைந்தனர்.