அரசுக்குச் சொந்தமான உல்லாச மனைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காள முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரல்

அரசுக்குச் சொந்தமான உல்லாச மனைகளை பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காள முதலீட்டு முன்மொழிவுகளைக் கோரல்
  • :
முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய உல்லாச விடுதிகளை மற்றும் அதன் வளாகங்கங்கள், அரசுக்குச் சொந்தமான குறைப்பயன்பாட்டு மனைகள் மற்றும் வளாகங்களைப் பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்குப் பொருத்தமான முறைகளைக் கண்டறிவதற்கான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.12.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 குறித்த அதிகாரிகள் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தூதுவராலயங்கள், சர்வதேச நிறுவனங்கள், இராஜதந்திரப் பயன்பாடுகள், அரச மற்றும் அரசுடன் இணைந்த நிறுவனங்கள், High-end Restaurant/Boutique Hotel மற்றும் மிகவும் பயனுள்ள முதலீட்டு வேலைத்திட்டங்களுக்கு குறித்த உல்லாச மனைகளை பயன்படுத்துவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆரம்பத்தில் அடையாளங் காணப்பட்டுள்ள 24 உல்லாச விடுதிகளை, அவை அமைந்துள்ள இடங்களுக்கமைய சமூகத்திற்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில், அரச தனியார் பங்குடமை முறையில் (PPP) இன் கீழ் பயனுள்ள உபயோகங்களுக்காக 30 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்குப் பொருத்தமான முதலீட்டாளர்களை அடையாளங்காண்பதற்கு இயலுமாகும் வகையில் ஆர்வங்காட்டுகின்ற முதலீட்டாளர்களிடமிருந்து விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles