நலன்புரி நன்மைகள் சபையினால் அஸ்வெசும முதலாம் கட்ட 1,408,635 (பதினான்கு லட்சத்து எட்டாயிரத்து அறுநூற்று முப்பத்தைந்து) பயனாளி குடும்பங்களுக்காக மார்ச் மாத உதவித்தொகையாக
ரூ. 11,179,801,250.00 (ஆயிரத்து நூற்று பதினேழு கோடி தொண்ணூற்று எட்டு லட்சத்து ஆயிரத்து இருநூற்று ஐம்பது) தொகையை பகிர்ந்தளித்து, அவர்களின் அஸ்வெசும பயனாளி கணக்குகளில் 2026.03.12 அன்று வரவு வைக்கப்படவுள்ளது.
இதேபோல், நிவாரணத்தின் இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்த 256,565 (இருநூற்று ஐம்பத்தாறாயிரத்து ஐநூற்று அறுபத்தைந்து) குடும்பங்களுக்கு, ரூ. 2,350,530,000.00 (இருநூற்று முப்பத்தைந்து கோடியே ஐநூற்று முப்பதாயிரம்) தொகை சம்பந்தப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு மார்ச் மாத உதவித்தொகையாக பகிர்ந்தளித்து 2026.03.12 அன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் 2026.03.12 முதல் மார்ச் மாத அஸ்வெசும உதவித்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.


