Thu, Jul 23, 2026

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவினால் 1.2 மில்லியன் குடும்பங்கள் வலுவூட்டப்பட்டன

அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவினால் 1.2 மில்லியன் குடும்பங்கள் வலுவூட்டப்பட்டன
  • :
அஸ்வெசும நலன்புரிக் கொடுப்பனவு கிடைக்கப்பெறும் ஏழை மற்றும் மிகவும் ஏழ்மையான 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டுவதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் வரும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது. அது அண்மையில் 13ஆம் தேதி கூடிய அமைச்சரவை சந்திப்பில் இடம் பெற்றது.

 அதன்படி ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி நிதி உதவியின் கீழ் குறித்த இரண்டு முன்னோடி திட்டங்களை தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமசபகர் பிரிவுகளுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்ட வரைபுகளுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக அவர்களின் வியாபார அல்லது தொழில் அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் (150,000/=) ஆகக் கூடுதலான மூலதனமாக வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இந்த முன்னாடி திட்டம் நாட்டின் 143 பிரதேச செயலாளார் பிரிவுகளில், 839 கிராம சேவகர் பிரிவுகளில் குடியிருக்கும் ஏழை மிகவும் ஏழையான சமூக குழுக்களில் உட்படும் 23,775 செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 2025 -2027 ஆம் ஆண்ட காலப்பகுதியில் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
 
அதன்படி கேகாலை மாவட்டத்தின், வரக்காப்பொலை பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக நிதி உதவி உரிமைக்கான கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் (14) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பண்ணில தலைமையில் வரக்காப்பொலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
 

Related Articles