அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி
  • :

அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகமாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க அவசரகால (பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) உத்தரவின் 11(1) விதிகளின்படி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைத்தல் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகத்திடம் உள்ளது.

இவர் தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-11-29

Related Articles