அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட வெளிநாட்டு கப்பல் சிப்பந்தியை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படை உதவி

அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட வெளிநாட்டு கப்பல் சிப்பந்தியை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படை உதவி
  • :

இலங்கை கடற்படை, கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC Colombo) ஒருங்கிணைப்பின் கீழ், 2026 மார்ச் 27 அன்று சீன கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த கப்பலின் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட சிப்பந்தி ஒருவரை கரைக்கு கொண்டுவர உதவியளித்தது.

இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பிராந்தியத்திற்கு அருகில் சுமார் 700 கடல் மைல்கள் தொலைவில் குறித்த கப்பல் பயணித்துக் கொண்டிருந்த போது இவ் அவசர நிலைமை எட்பட்டுள்ளது. கப்பலின் சிப்பந்தி ஒருவரின் உடல்நிலை குறித்து கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அவசர அழைப்பு கிடைத்ததற்கமைய கடற்படை விரைவாக செயல்பட்டது.

அதற்கமைய, MRCC யின் ஒருங்கிணைப்புடன் அந்த கப்பல் காலி துறைமுக எல்லைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் கடற்படையினால் கப்பலுக்கு அவசர முதலுதவி மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் நோயாளியை மீட்க தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தினால் ஒரு கடற்படை படகு உடனடியாக அனுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில், நேற்று (மார்ச் 27) காலை கரைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளி, கடற்படையின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் மேலதிக சிகிச்சைக்காக காலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிட்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இலங்கை கடற்படை, கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் (MRCC) தொடர்ந்து ஒருங்கிணைந்து, இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு பிராந்தியத்திற்குள் அவசரநிலைக்கு உள்ளாகும் கப்பல்கள் மற்றும் மீனவ சமூகத்துக்கு உதவி வழங்க தொடர்ந்து தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles