ரயில் சேவையில் ஸ்மார்ட் பயணச்சீட்டு முறை அறிமுகம்

ரயில் சேவையில் ஸ்மார்ட் பயணச்சீட்டு முறை அறிமுகம்
  • :

CSRP திட்டத்தின் கீழ் இணையவழியில் ரயில் பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, பழைய ரயில் பயணச்சீட்டுகளுக்குப் பதிலாக புதிய பயணச்சீட்டு முறை மற்றும் அவற்றைச் சரிபார்ப்பதற்கான தேவையான உபகரணங்களுடன், நாடி முழுவதும் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இந்த வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் ஒரு முன்னோட்டத் திட்டமாக, இத்திட்டம் ஏப்ரல் மாதத்தின் சில நாட்களுக்குள் களனிவளிப் பாதையில் உள்ள நாரஹேன்பிட்ட, நுகேகொட, மாகும்புர, ஹோமாகம மற்றும் பாதுக்க ரயில் நிலையங்களில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் எழும் சிக்கல்கள் கண்டறியப்பட்டு, இந்த முறை முதலில் இந்தப் பாதையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், பின்னர் மற்ற பாதைகளிலும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக பயணிகளுக்கு வசதியை வழங்கும் பிற அம்சங்களுடன் இத்திட்டத்தை இந்த ஆண்டிற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ​​போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது கண்காணிப்புப் பயணத்தின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles